New Updates! Fresh news just arrived.

வெற்று காணியில் காணப்பட்ட மனித எலும்புக்கூடு!

News

வெற்று காணியில் காணப்பட்ட மனித எலும்புக்கூடு!

October 13, 2026 8:26 pm
வெற்று காணியில் காணப்பட்ட மனித எலும்புக்கூடு!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் உள்ள வெற்று காணியில் எலும்புக்கூடு ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த காணியில் எலும்புக்கூடு இருப்பதை அவதானித்த சிலர் கிராம சேவகர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். அதனடிப்படையில் குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்றுள்ளனர்.

குறித்த நபர் பல நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் இவ்வாறு எலும்புக்கூடாக மாறியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் எலும்புக்கூடானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now