New Updates! Fresh news just arrived.

யாழில் ஆரம்பமான சர்வதேச சட்ட மாநாடு!

News

யாழில் ஆரம்பமான சர்வதேச சட்ட மாநாடு!

January 24, 2026 3:37 pm
யாழில் ஆரம்பமான சர்வதேச சட்ட மாநாடு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மற்றும் இந்தியாவினுடைய பிரசித்தி பெற்ற சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் '3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு - 2026' இன்று சனிக்கிழமை (24) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் ஆரம்பமானது.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரான நா.வேதநாயகன் விசேட அதிதியாகக் கலந்து சிறப்பித்திருந்தார்.

சுரானா சட்ட நிறுவனத்தோடு, இணைந்து 2024ஆம் ஆண்டில் முதலாவது சட்ட மாநாட்டினை நடத்திய யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை, 2025இல் இரண்டாவது மாநாட்டினையும் வெற்றிகரமாக நடத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, சர்வதேச சட்ட நிபுணர்களினை இணைத்து மூன்றாவது முறையாக இம்முறை 2026ஆம் ஆண்டிற்கான மாநாட்டினை இன்றும் நாளையும் நடத்துகின்றது.

இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான குறித்த மாநாட்டின் முதல் நாள் அமர்வுகளில், நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறையினுடைய உயர்மட்டப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

உயர்நீதிமன்ற நீதியரசர் கௌரவ சிதம்பரம்பிள்ளை துரைராஜா மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதியரசர் கௌரவ ரோஹித்த அபேசூரிய ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினுடைய மேலதிக செயலாளர் திருமதி சரண்யா ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க மற்றும் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவரான ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் சிறி சற்குணராஜா மற்றும் சட்டத்துறையின் தலைவரான திருமதி கோசலை மதன், இவர்களுடன் சட்டத்துறை சார்ந்த விரிவுரையாளர்கள், மற்றும் சட்டத்தரணிகள், மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எனப் பலரும் இநிகழ்வில் பங்கேற்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now