New Updates! Fresh news just arrived.

சுவிஸில் இருந்து யாழ் வந்தவர் சித்திரவதைக்கு உள்ளாக்கி கொ...

News

சுவிஸில் இருந்து யாழ் வந்தவர் சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை: நகை பணம் போன்றனவும் திருட்டு!

May 17, 2026 6:13 pm
சுவிஸில் இருந்து யாழ் வந்தவர் சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை:  நகை பணம் போன்றனவும் திருட்டு!
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம் (வயது 67) சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து, அவருடைய நகைகள் பணம் என்பவற்றினை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நீண்ட காலமாக சுவீஸ் நாட்டில் தனது குடும்பத்தோடு, வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2 மாத காலமாக விடுமுறையில் சண்டிலிப்பாயிலுள்ள தனது வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார்.

இதேவேளை, கடந்த 14ஆம் திகதிக்கு பின்னர் அவரோடு குடும்பத்தார் தொடர்பு கொள்ள முடியாத நிலை காணப்பட்ட நிலையில், சனிக்கிழமை (16) இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மானிப்பாய் பொலிஸார் குறித்த வீட்டுக்கு சென்ற போது தூர்நாற்றம் வீசியதினைத் தொடர்ந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, உடலில் வெட்டு காயங்களுடன் முதியவரினுடைய சடலம் காணப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தினை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளினை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில், வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமராக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், கமரா சேதமாக்க முன்னரான பதிவுகளினடிப்படையில் 14ஆம் திகதி இரவு வேளை முகமூடி அணிந்த இருவர் சமையலறையின் வழியாக உள்நுழைந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் புகுந்தவர்கள், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த குறித்த கண்காணிப்பு கமராக்களினை சேதமாக்கிய பின்னர், முதியவரை படுகொலை செய்து விட்டு, வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பெருந்தொகை பணத்தினை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை முதியவரினுடைய உடற்கூற்று பரிசோதனையின் போது. உடலில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் கூரிய ஆயுதங்களினால் குத்தப்பட்டமைக்கான அடையாளங்களும் காணப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now