400 லீற்றர்கள் டீசலை கொண்டு சென்ற நபர் பொலிஸாரால் கைது! -...
News
400 லீற்றர்கள் டீசலை கொண்டு சென்ற நபர் பொலிஸாரால் கைது!
யாழ். மருதனார்மடம் பகுதியில் வைத்து 400 லீற்றர் டீசளோடு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து குறித்த எரிபொருளை கொள்வனவு செய்து, உழவு இயந்திரத்தில் கொண்டு வருவதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிதர்சனுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது
கைது செய்யப்பட்ட நபர் நுவரெலியாவை சேர்ந்தவர் என்றும், அவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து வேலை செய்து வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரினை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்