New Updates! Fresh news just arrived.

யாழில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந...

News

யாழில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தர்கவர் ஹெரோயினுடன் கைது!

April 26, 2026 12:38 pm
யாழில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தர்கவர் ஹெரோயினுடன் கைது!
யாழில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை நேற்றிரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்படி, குருநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் இவரிடம் இருந்து 2 கிராம் 35 மில்லிகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரினால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகளினை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now