மெகசின் சிறைக்கு போதைப்பொருள் விநியோகித்த அதிகாரி கைது - ...
News
மெகசின் சிறைக்கு போதைப்பொருள் விநியோகித்த அதிகாரி கைது
பொரளை மெகசின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கொண்டு சென்று விநியோகித்ததாகசந்தேகிக்கப்படும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை பிரிவுக்கு பொறுப்பான குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே குறித்த அதிகாரி சிக்கியுள்ளார். அவரிடமிருந்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ‘ஐஸ்’ மற்றும் 20 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு முன்னதாக, தெஹிவளையைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் கல்கிசை பகுதியில் வைத்து போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரிடமிருந்து வாட்ஸ்அப் அழைப்பு மூலம் போதைப்பொருள் பெற்றுக்கொள்ள வேண்டிய இடம் தொடர்பான தகவல் கிடைத்ததாக தெரியவந்துள்ளது.
அந்தத் தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் பொதியைப் பெற்றுக்கொண்ட சந்தேகநபர், அதனை பொரளை வனாத்த வீதியில் வைத்து மற்றுமொரு நபரிடம் ஒப்படைக்கத் தயாராக இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்வதற்காக கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்கள பொறுப்பதிகாரியின் தலைமையில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சிறைச்சாலை விளையாட்டு உடையில் வந்த ஒருவர் போதைப்பொருள் பொதியைப் பெற்றுக்கொள்வதற்காக சந்தேகநபரை அணுகியுள்ளார். இதனைத் தொடர்ந்து மறைந்திருந்த பொலிஸ் அதிகாரிகள் அவரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கடந்த ஜனவரி மாதம் முதல் மெகசின் சிறைச்சாலையில் பணியாற்றி வந்த 53 வயதுடைய அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் கடமையாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்காலை – பெலியத்த பகுதியைச் சேர்ந்த குறித்த சிறை அதிகாரி தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.