வாரந்தோறும் ஒருவரை சிறையில் அடைப்பதுதான் அரசாங்கத்தின் ஒர...
News
வாரந்தோறும் ஒருவரை சிறையில் அடைப்பதுதான் அரசாங்கத்தின் ஒரே வேலை: பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்!
வாரந்தோறும் ஒருவரை சிறையில் அடைப்பதுதான் அரசாங்கத்தின் ஒரே திட்டம் என்று பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகத்தில் நேற்று (25) எதிர்க்கட்சி அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான குற்ற அலையைச் சுட்டிக்காட்டிய ஜி.எல். பீரிஸ், ஆண்டின் முதல் ஒன்பது வாரங்களில் மட்டும் தெருக்களில் பத்து பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு மக்களினை எப்போதும் பாதுகாத்து வந்த ஜனநாயக கலாச்சாரம் தற்போது கடுமையாக தாக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கொலை நடப்பதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பே அது பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதல் என்று அறிக்கைகளை வெளியிட்டதற்காக காவல்துறையை அவர் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், “பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான பிரச்சனை கொலைக்கு ஒரு காரணமா? தேசிய பாதுகாப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை என பொறுப்பான அமைச்சர் தொடர்ந்து கூறி வருகின்றார். இவை தனிப்பட்ட சம்பவங்கள். ஆனால் இந்த தனிப்பட்ட சம்பவம் நடக்கும்போது ஒரு சாதாரண குடிமகன் அங்கு இருந்தால் என்ன பாதுகாப்பு கிடைக்கும்?”
நாட்டின் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் எந்த அனுதாப மனப்பான்மையையும் காட்டவில்லை என்றும், பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக, தனிநபர்களை சிறையில் அடைக்கும் அரசியல் திட்டத்தில் மட்டுமே அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்றும் திரு. ஜி.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.