New Updates! Fresh news just arrived.

அருச்சுனாவின் காணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அருச...

News

அருச்சுனாவின் காணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அருச்சுனாவின் பிறந்த ஊர் மக்கள்!

February 22, 2026 11:48 pm
அருச்சுனாவின் காணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அருச்சுனாவின் பிறந்த ஊர் மக்கள்!
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவின் காணிகளால் தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவரது பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

பெரியவிளானில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் காணியானது பலவருடங்களாக துப்பரவு செய்யப்படாமல் பற்றை காடாக உள்ளது. அங்கு ஒரு பாழடைந்த கிணறுள் உள்ளது.

அந்த பற்றை காணிக்குள் விஷம் கொண்ட பாம்புகள் மற்றும் வேறு விஷ ஜந்துக்கள் என்பன காணப்படுகின்றன. குறித்த காணியில் உள்ள பாம்புகள் வெளியேறி வீடுகள், வீதிகள், அருகில் உள்ள கடைகளுக்குள் வருவதால் மக்கள் மிகவும் அச்சத்தின் மத்தியில் இருக்கின்றனர்.

வீதியில் சிறியவர்களோ, பெரியவர்களோ யாரும் பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. அருகில் உள்ள ஆலயத்துக்கு, அருகில் உள்ள கடைக்கு கூட செல்வதற்கு அச்சமாக இருக்கிறது.

மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர், தான் பல நல்ல விடயங்களை செய்வதாக வாயால் மட்டுமே கூறிக்கொண்டு இருப்பவர் தனது காணி குறித்து அக்கறை இல்லாமல் இருப்பது விசனத்தை ஏற்படுத்துகிறது.

காணியை சுத்தம் செய்யா விட்டால், பிரதேச சபையினால் அந்த காணியானது சுத்தம் செய்யப்பட்டு பிரதேச சபைக்கு உரியதாக மாற்றவேண்டிய நிலைமை கூட ஏற்படலாம். பெரியவிளானில் காணிகள், வீடுகள் இன்றி பல குடும்பங்கள் வாழ்கின்றன. அவர் ஒரு நல்ல நோக்கம் உள்ளவர் என்றால், தன்னால் பராமரிக்க முடியாத காணிகளை அந்த மக்களுக்கு வழங்கலாமே?

அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். ஆனால் அவர் பிறந்த ஊரான பெரியவிளான் பகுதியில் மிகவும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்கள் இருக்கின்றனர். புனரமைக்கப்படாத வீதிகள் இருக்கின்றன. செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் பல உள்ளன. அவற்றை எல்லாம் அவரால் செய்ய முடியாது ஆனால் வாயால் வெட்டி பேச்சு பேச முடியும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல் ஆகியவற்றுக்கு பரீட்சை வைத்து அதில் சித்தி பெறுபவர்களையே போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா கூறுகிறார். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதுபோல நாங்களும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம்.. அதாவது, இனிமேல் நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனநிலை குறித்து பரீட்சித்து, அவர்கள் மனநலம் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக தான் இருக்கின்றார்களா என பரீட்சித்து பின்னரே தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றோம். இதை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now