ஜனாதிபதி பங்கேற்கும் மக்கள் பேரணி இன்று களுத்துறையில் ஆரம...
News
ஜனாதிபதி பங்கேற்கும் மக்கள் பேரணி இன்று களுத்துறையில் ஆரம்பம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொள்ளும் மக்கள் பேரணிகளின் தொடர்ச்சியான நிகழ்வுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
“எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்குச் சுபிட்சம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மக்கள் சந்திப்புகளின் முதல் கட்ட நடவடிக்கைகள் களுத்துறை மாவட்டத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் தொடக்க நிகழ்வாக இன்று பிற்பகல் 2.00 மணிக்கு புளத்சிங்கல நகரில் மக்கள் பேரணி நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3.30 மணியளவில் பேருவளை நகரிலும் மற்றுமொரு பேரணி இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வுகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்று பொதுமக்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.