New Updates! Fresh news just arrived.

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் சூழல்: உலகளவில் பொது...

News

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் சூழல்: உலகளவில் பொது அமைதிக்கு அச்சுறுத்தல்!

March 14, 2026 8:25 am
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் சூழல்: உலகளவில் பொது அமைதிக்கு அச்சுறுத்தல்!
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் படைகளினுடைய தாக்குதலினால் மத்திய கிழக்கில் தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான், பாரசீக வளைகுடாவிலுள்ள குறுகலான ஹோர்முஸ் நீரிணையை மூடியதுடன், அரபு நாடுகளில் இருந்து இவ்வழி ஊடாகத்தான் எண்ணெய் கப்பல்கள் பிற நாடுகளுக்கு பயணித்து வருகின்றன.

இதன்படி, உலகின் 20 சதவீதமான எண்ணெய் விநியோகம் நடக்கும் குறித்த கடல் பாதையில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்கி வரும் நிலையில் சமீபத்தில் தாய்லாந்து கப்பல் உட்பட 3 வணிக கப்பல் மீது தாக்குதலானது நடத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வளைகுடா நாடுகளில் விரிவடைந்து வரும் மோதலானது பொதுமக்களுக்கு பெரும் துயரத்தினை ஏற்படுத்தி இருக்கின்றது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலானது ஒட்டுமொத்த உலகத்தின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கின்றது.

மேலும், அனைத்துத் தரப்பினரும் பதற்றத்தினை தணித்துக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now