New Updates! Fresh news just arrived.

இரட்டை கொலையுடன் தொடர்புடைய நபர் யாழில் கைது!

News

இரட்டை கொலையுடன் தொடர்புடைய நபர் யாழில் கைது!

October 2, 2026 7:25 pm
இரட்டை கொலையுடன் தொடர்புடைய நபர் யாழில் கைது!
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் நுவரெலியாவில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தெரியவருகையில்,

குறித்த நபர் நுவரெலியாவில் இரட்டை கொலையினை செய்துவிட்டு யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகி இருந்துள்ளார்.

இந்நிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸார் அவரை இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை நுவரெலியா பொலிஸாரிடம் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now