ஜனாதிபதியின் விஜயம் தொடர்பான முன்னாயத்த பணிகள் தீவிரம்! -...
News
ஜனாதிபதியின் விஜயம் தொடர்பான முன்னாயத்த பணிகள் தீவிரம்!
நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளினை மீள ஆரம்பித்து வைக்கும் நோக்கில் ஜனாதிபதி எதிர்வருகின்ற வாரத்தில் நிந்தவூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதனையடுத்து ஜனாதிபதியினுடைய வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதனுடைய ஒரு பகுதியாக நேற்று வெள்ளிக்கிழமை(15) ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நிந்தவூர் பிரதேச சபையினுடைய தவிசாளர், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர், இலங்கை பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள், பிரதேச செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் நிந்தவூர் கலாச்சார மண்டபத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளினை நேரில் பார்வையிட்டனர்.
இதன்போது, கலாச்சார மண்டபத்தினுடைய தற்போதைய நிலை, மீள ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் மற்றும் ஜனாதிபதியினுடைய விஜயத்துடன் தொடர்புடைய ஏற்பாடுகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தன.
பாறுக் ஷிஹான்