மானிப்பாய் சபையில் தூக்கி வீசப்பட்ட கணக்கறிக்கை!
News

மானிப்பாய்சபை அமர்வின் போது கணக்கறிக்கை தொடர்பிலான பிரச்சினையால் குறித்த கணக்கறிக்கையானது தூக்கி வீசப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மானிப்பாய் பிரதேச சபையினுடைய மாதாந்த அமர்வு நேற்று முன்தினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமான நிலையில் கணக்கறிக்கையானது சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த கணக்கறிக்கையினை உடனே வழங்குவதால் அதில் உள்ள பிழைகளினை உடனே கண்டுபிடிப்பது கடினம் என அந்த கணக்கறிக்கையை கூட்டம் நடைபெறுவதற்கு முன்னைய நாட்களில் வழங்க வேண்டும் எனவும் உறுப்பினர் நா.பகீரதன் தெரிவித்தார்.
இந்நிலையில் குறுக்கிட்ட தவிசாளர் ஜெசீதன், கணக்கறிக்கையில் தவறு உள்ளது என்றால், குறித்த அறிக்கை சபையில் முன்மொழிந்து, வழிமொழிய முன்னர் அதில் தவறு உள்ளது என கூற வேண்டும். எல்லாம் முடிந்த பின்னர் கூறக்கூடாது என்று தெரிவித்தார்.
அந்தநேரத்தில் தவிசாளருக்கும், குறித்த அந்த உறுப்பினருக்கும் இடையே கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் உறுப்பினர் தனது கையில் இருந்த கணக்கறிக்கையினை தூக்கி சபையில் வீசி எறிந்ததினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பு.கஜிந்தன்