அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புனர்நிர்மாணப் பணி சம்மாந்...
News
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புனர்நிர்மாணப் பணி சம்மாந்துறையில் இருந்து ஆரம்பம்!
“ஒற்றுமையின் பலம் – வெற்றியின் வழி” என்ற தொனிப்பொருளின் கீழ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புனர்நிர்மாணம் மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் முதற்கட்ட கலந்துரையாடல் இன்று சம்மாந்துறையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், அமைப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்பக் கூட்டத்தில், சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கட்சியினுடைய புனர்நிர்மாணப் பயணத்தினை சம்மாந்துறையிலிருந்து ஆரம்பிப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பாக அமையும் என்று கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். மேலும், கட்சியின் அமைப்பை கிராம மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை பலப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எதிர்கால அரசியல் பயணத்திற்கான புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகக் கருதப்படுகின்றது.
நூருல் ஹுதா உமர்