ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையில் பேரீச்சம் பழம் வழங்கல் ஆரம்...
News
ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையில் பேரீச்சம் பழம் வழங்கல் ஆரம்பம்!
புனித ரமழான் மாதத்தையொட்டி, ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள பள்ளிவாயல்கள், மதரஸாக்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு பேரீச்சம் பழம் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (27) நடைபெற்றது.
இந்த நிகழ்வு, ஹிரா பவுண்டேஷன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் இடம்பெற்றது.
ரமழான் மாதத்தில் நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகளை எளிதாக்கும் நோக்கில், நாட்டின் பல பகுதிகளில் உள்ள பள்ளிவாயல்கள் மற்றும் மதரஸாக்களுக்கு பேரீச்சம் பழங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் எஸ்.எச்.எம். அஸ்பர் (காத்தான்குடி நகர சபை தவிசாளர்), அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி) (ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் செயலாளர் நாயகம்), காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
நூருல் ஹுதா உமர்