New Updates! Fresh news just arrived.

யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத...

News

யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட வாள்!

February 10, 2026 6:20 pm
யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட வாள்!
சமிக்ஞையை மீறி சென்றதாக கூறி இன்று அதிகாலை அல்லைப்பட்டி பகுதியில் வைத்து, ஹையேஸ் வாகனம் ஒன்றின் மீது ஊர்காவல்துறை பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் குறித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தின் போது மேலும் இரண்டு இளைஞர்கள் குறித்த வாகனத்தில் இருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now