New Updates! Fresh news just arrived.

காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆளுநரை சந்தித்த குழுவினர்! - ...

News

காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆளுநரை சந்தித்த குழுவினர்!

June 15, 2026 4:25 pm
காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆளுநரை சந்தித்த குழுவினர்!
யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட் கிழமை (15) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.

36 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் இன்னும் அகதிகளாகவே வாழ்ந்து வருவதாகத் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவால்,ஜனாதிபதி அவர்களினுடைய கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக இரண்டு பிரதான கோரிக்கைகளினை தமது மனுவில் முன்வைத்துள்ளனர்.

2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பிலான வர்த்தமானி (இல. 1810) முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

மயிலிட்டியில் தொடர்ச்சியாக நிலம் மீட்பதற்காக அறவழியாக போராடி வருகின்ற ஜே/248, ஜே/251, ஜே/255 மற்றும் ஜே/246 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களினுடைய காணிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டும்.

போராட்டத்தின் பின்னர் ஆளுநர் செயலகத்துக்கு வருகை தந்து இந்த மனுவை அவர்கள் ஒப்படைத்தனர். மக்களின் இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவைப் பெற்றுக்கொண்ட கௌரவ ஆளுநர் அவர்கள், உரிய துரித நடவடிக்கைகளுக்காக அதனை உடனடியாக மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now