வீடு புகுந்து 28 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்ட கொள்ளையர்க...
News
வீடு புகுந்து 28 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்ட கொள்ளையர்கள்!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ். உரும்பிராய் தெற்கு பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் சுமார் 28 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வீட்டில் இருந்தவர்கள் கொண்டாட்டம் ஒன்றுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த நிலையில், வீட்டிலிருந்த ஒருவர் குளியல் அறைக்கு சென்றிருந்த சமயம், கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்து 28 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
மறுநாள் காலை, வீட்டிலிருந்தவர்கள் நகைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றபோது அங்கிருந்த அலுமாரிகள் திறந்த நிலையில் இருந்துள்ளது.
உடனடியாக அதன் உள்ளே இருந்த தங்க நகைகளை தேடியபோது அவை கொள்ளையிடப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வீட்டார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சி.சி.டி.வி பதிவு களின் அடிப்படையிலும், விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பு.கஜிந்தன்