New Updates! Fresh news just arrived.

வாகன உரிமை மாற்றத்திற்கும் TIN இலக்கம் கட்டாயம்!

News

வாகன உரிமை மாற்றத்திற்கும் TIN இலக்கம் கட்டாயம்!

January 12, 2026 12:57 pm
வாகன உரிமை மாற்றத்திற்கும் TIN இலக்கம் கட்டாயம்!
வாகனங்களின் உரிமையினை மாற்றும் போது, வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படுகின்ற "TIN இலக்கம்" தற்போது கட்டாயமாக்கப்பட்டிருப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களமானது அறிவித்துள்ளது.

இதற்கான சட்ட நடைமுறைகளானது கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகமான கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காலமும் புதிய வாகனங்களினை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்வதற்கு மாத்திரமே TIN இலக்கமானது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த ஆண்டு தொடக்கம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களினுடைய உரிமையானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்கள், கை உழவு இயந்திரங்கள் மற்றும் டிரக்டர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனப் பதிவு அல்லது உரிமை மாற்றத்தின் போது, புதிய உரிமையாளரினுடைய தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் TIN இலக்கம் ஆகியவற்றினை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவு அமைப்பில் உள்ளீடு செய்வது வேண்டும்.

குறித்த சட்டத்தினை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், பல சந்தர்ப்பங்களில் அது ஒத்திவைக்கப்பட்டதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினுடைய ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now