New Updates! Fresh news just arrived.

அமெரிக்கா வடக்கு மக்களுடன் கலாச்சார விழுமியங்களை பகிர்ந்த...

News

அமெரிக்கா வடக்கு மக்களுடன் கலாச்சார விழுமியங்களை பகிர்ந்து கொள்வதில் உறுதியாக உள்ளது.. யாழில் மேனகா நய்யர் தெரிவிப்பு!

April 27, 2026 9:34 pm
அமெரிக்கா வடக்கு மக்களுடன் கலாச்சார விழுமியங்களை பகிர்ந்து கொள்வதில் உறுதியாக உள்ளது.. யாழில் மேனகா நய்யர் தெரிவிப்பு!
அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் கருத்துக்களை வட இலங்கை மக்களுடன் பகிர்ந்துகொள்வதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தகவல் கூடம் பிரதிபலிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகார அலுவலரான மேனகா நய்யார் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க தகவல் கூடத்தினுடைய 15ஆவது ஆண்டு நிறைவின் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்த்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கல்வி, புத்தாக்கம் மற்றும் அமெரிக்க விழுமியங்கள் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களினூடாக வட இலங்கையிலுள்ள சமூகங்களை அமெரிக்காவுடன் இணைப்பதில் நீண்டகாலமாக அது வகிக்கும் பங்கினை இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.

அமெரிக்க சுதந்திரத்தினுடைய 250 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் உலகளாவிய ரீதியில் இடம்பெறுகின்ற Freedom 250 முன்முயற்சியினுடைய ஒரு பகுதியாக, புதிய "Freedom 250 Pavilion" கூடத்தையும் இதன்போது தூதரகம் திறந்து வைத்தது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க தகவல் கூடமானது, உள்ளூர் சமூகங்களுடனான நேரடி ஊடாட்டத்திற்கான ஒரு தளமாகவும் Jaffna Social Action Center உடனான பங்காண்மையோடு 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

திறனாய்வுச் சிந்தனை, தலைமைத்துவம் மற்றும் புத்தாக்கம் போன்ற விடயங்களில் திறன்களினை கட்டியெழுப்பும் அதேவேளை, அமெரிக்காவைப் பற்றி அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகளினையும் அது வழங்குகின்றது.

யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த தகவல் கூடமானது, வட இலங்கையில் வளர்ந்துவரும் தலைவர்களினை அமெரிக்க அனுபவங்களிலும், கண்ணோட்டங்களிலும் வேரூன்றிய சிந்தனைகள், வளங்கள் மற்றும் வாய்ப்புகளோடு இணைப்பதில் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது.

ஊடாடும் நிகழ்ச்சித்திட்டங்களினையும் சமூக நிகழ்வுகளினையும் நடத்துவதற்கான குறித்த தகவல் கூடத்தின் திறனை Freedom 250 Pavilion விரிவுபடுத்துவதோடு, ஒத்துழைப்பு, கலந்துரையாடல் மற்றும் கற்றலுக்கான ஒரு ஊக்கம் நிறைந்த இடமாகவும் அதன் பங்கினை மேலும் வலுப்படுத்துகின்றது.

அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் கருத்துக்களினை வட இலங்கை மக்களோடு பகிர்ந்துகொள்வதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள குறித்த அமெரிக்கத் தகவல் கூடம் பிரதிபலிக்கின்றது.

எமது ஸ்தாபக இலட்சியங்களினையும், யாழ்ப்பாணம் உட்பட உலகம் முழுவதும் காணப்படும் எமது பங்காண்மைகளினையும் எடுத்துக்காட்டும் ஒரு மைல் கல்லான, அமெரிக்க சுதந்திரத்தின் 250 வருடங்களினை அமெரிக்கா இவ்வருடம் ஜுலை மாதம் 4ஆம் திகதி கொண்டாடவுள்ளது.

புதிய Freedom 250 Pavilion கூடம் மற்றும் எமது நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகியவற்றின் ஊடாக, அமெரிக்காவுடன் ஒன்றிணைந்து, எமது வரலாறு, சமூகம் மற்றும் புத்தாக்கங்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ளுமாறு சமூகத்தினை நாம் அழைக்கின்றோம்."

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்த அமெரிக்கத் தகவல் கூடமானது 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 10,000இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பயனடையும் வகையில் எறக்குறைய 400 நிகழ்ச்சித் திட்டங்களினை நடத்தியுள்ளது.

இலக்கம் 23, அத்தியடி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள குறித்த கவல் கூடமானது, அமெரிக்கா, ஆங்கில மொழியினைக் கற்றல், கல்வி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் திறன் சார்ந்த நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவை தொடர்பான வளங்களினை இலவசமாக வழங்குகின்றது.

எமது இத்தகவல் கூடத்திற்கு நேரில் வருகை தருவதன் மூலமாகவோ, அல்லது 021 222 0665 என்கின்ற தொலைபேசி இலக்கத்தினைத் தொடர்பு கொள்வதன் மூலமாகவோ அல்லது info@americancornerjaffna.com மூலமாகவோ இங்கு நடைபெறும் இலவச நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கேற்கலாம்.

இங்கு நடைபெறும் நிகழ்வுகள், பதிவு செய்தல் மற்றும் உறுப்பினராவதற்கான வாய்ப்புகள் தொடர்பான மிகச்சமீபத்திய இற்றைப்படுத்தல்களினை அறிந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தகவல் கூடத்தின் முகநூலில் (facebook.com/amcornerjaffna) பின்தொடரவும்.

Spaces எமது American வலையமைப்பிற்கு உங்களினை வரவேற்கின்றோம்: யாழ்ப்பாணத்திலமைந்துள்ள அமெரிக்கத் தகவல் கூடமானது, கொழும்பு, கண்டி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் கிளைகளினைக் கொண்டுள்ளது.

அமெரிக்கத் தூதரகத்தின் American Spaces வலையமைப்பினுடைய ஒரு பகுதியாகும். இவை அனைவருக்கும் திறந்திருப்பதோடு, ஊடாட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளின் ஊடாக அமெரிக்க மக்கள், அமெரிக்க கலாச்சாரம் மற்றும் கருத்துக்களினைப் பற்றி அறிந்துகொள்வதற்கு ஓர் வரவேற்புமிக்க சூழலையும் வழங்குகினாறன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now