New Updates! Fresh news just arrived.

பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!

News

பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!

November 19, 2026 6:28 pm
பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையடிக்கிராமம் 02 பகுதியில் 35 வயதுடைய பெண்ணொருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இஸ்மாயில் ரிஸ்வானா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், அவர் கடந்த 20 வருடங்களாக மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நூர்டீன் சர்ஜூனின் உத்தரவுக்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்துக்குச் சென்று மரண விசாரணைகளை முன்னெடுத்தார்.

மேலும், சம்பவ இடத்திற்கு அம்பாறை குற்றதடயவியல் பிரிவு பொலிஸாரும் வருகைதந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து, உயிரிழந்த பெண்ணின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளினை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தில்சாத் பர்வீஸ்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now