New Updates! Fresh news just arrived.

7,000க்கும் அதிகமான இ.போ.ச பேருந்துகள் உள்ள போதிலும் இயங்...

News

7,000க்கும் அதிகமான இ.போ.ச பேருந்துகள் உள்ள போதிலும் இயங்கக்கூடிய நிலையில் 5,000 மட்டுமே!

November 5, 2026 1:59 pm
7,000க்கும் அதிகமான இ.போ.ச பேருந்துகள் உள்ள போதிலும் இயங்கக்கூடிய நிலையில் 5,000 மட்டுமே!
இலங்கை போக்குவரத்து சபையில் 7,130 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (05) எம்.பி ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவற்றில் 6,987 சாதாரண பேருந்துகள் எனவும் 143 சொகுசு பேருந்துகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், குறித்த பேருந்துகளில் சுமார் 5,000 பேருந்துகள் மட்டுமே இயங்குவதற்குப் பொருத்தமான நிலையில் உள்ளதாக அவர் வெளிப்படுத்தினார்.

இதனிடையே, மேல் மாகாணத்தில் 5,524 தனியார் பேருந்துகளும், மத்திய மாகாணத்தில் 2,433 பேருந்துகளும், தென் மாகாணத்தில் 1,326 பேருந்துகளும் இயங்கி வருவதாக பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

வட மாகாணத்தில் 976 தனியார் பேருந்துகளும், கிழக்கு மாகாணத்தில் 520 பேருந்துகளும், வடமேல் மாகாணத்தில் 1,324 பேருந்துகளும், வடமத்திய மாகாணத்தில் 509 பேருந்துகளும், ஊவா மாகாணத்தில் 1,043 பேருந்துகளும், சப்ரகமுவ மாகாணத்தில் 1,866 பேருந்துகளும் இயங்கி வருகின்றன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி வரை 2,966 தனியார் பேருந்துகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, சாதாரண சேவைப் பேருந்துகள் 1,826, அரை சொகுசுப் பேருந்துகள் 257, சொகுசுப் பேருந்துகள் 651 மற்றும் அதி சொகுசுப் பேருந்துகள் 232 என்பவற்றுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மேலும் சுட்டிக்காட்டினார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now