நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பில் இதுவ...
News
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பில் இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை!
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து அரசாங்கத்திற்குள் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ அமைச்சரவை அறிக்கையில் தெரிவித்தார்.
இன்று (09) நடைபெற்ற அமைச்சரவையின் முடிவு தொடர்பிலான ஊடக சந்திப்பில், ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்விடயம் குறித்து அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை, ஆனால் பல்வேறு நிபுணர்களிடம் இருந்து பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்தார்.
இருப்பினும், கோவிட் காலத்தில் பல்வேறு நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்றும், நிபுணர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சிறப்பு நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்க சுகாதார அமைச்சு முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை அறிக்கை ஒன்றில், அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
"நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பில் அரசாங்கத்தில் இன்னம் எந்தவொரு விவாதமும் நடைபெறவில்லை. இருப்பினும், ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தொழில் வல்லுநர் குழுக்களிடம் இருந்து பரிந்துரைகள் வந்துள்ளன. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒன்று, நம் நாட்டில் பிறக்கும்போதே எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது, கோவிட் காலத்தில் பல தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இந்தக் காரணிகளாலும், அவர்களின் அனுபவங்களாலும், பொதுச் சேவையில் அதிக காலம் பணியாற்ற முடியுமா என்று தொழில் வல்லுநர்கள் கேட்டுள்ளனர். முன்னதாக, நம் நாட்டில் உள்ள சிறப்பு மருத்துவர்கள், மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 60-63 ஆண்டுகளாக நீட்டிக்க சுகாதார அமைச்சு ஒரு முடிவை எடுத்தது. தொழில் வல்லுநர்களிடமிருந்து வேறு கோரிக்கைகளும் உள்ளன. இருப்பினும், குறிப்பாக நீதிபதிகள் தொடர்பாக அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை."