தெற்கு ஈரானில் உள்ள இலக்குகளின் மீது அமெரிக்கா தொடர் தாக்...
News
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகளின் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்!
தெற்கு ஈரானில் ஏவுகணைகள் மற்றும் கண்ணி வெடிகளினை நிலைநிறுத்துவதற்கு பயன்படுத்தப்படும் படகுகளினை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானியப் படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதற்கான தற்காப்பு நடவடிக்கையாகவே குறித்த தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளைகளின் (CENTCOM) பிரதானி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும், தற்போது நிலவுகின்ற போர்நிறுத்தம் தொடர்பில் அமெரிக்கா மிகவும் நிதானத்தோடு. செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா நடத்திய குறித்த தாக்குதல்களுக்கு ஈரான் இதுவரைக்கும் பதிலளிக்கவில்லை என்றும், எதிர்காலத்தில் அமைதி ஒப்பந்தத்தில் இது என்ன வகையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.