தாம் நிரபராதிகள்: யோஷித மற்றும் கரன்னாகொட மன்றில் தெரிவிப...
News
தாம் நிரபராதிகள்: யோஷித மற்றும் கரன்னாகொட மன்றில் தெரிவிப்பு!
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்குத் தாம் நிரபராதிகள் என யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் திறந்த மன்றில் பிரதிவாதிகளுக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டன.
குறித்த குற்றச்சாட்டுக்களுக்குத் தாம் நிரபராதிகள் என்று பிரதிவாதிகள் இருவரும் நீதிமன்றில் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் சாட்சி விசாரணை ஆரம்பிக்கப்பட்டதோடு, மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
2006ஆம் ஆண்டில் உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்யாத யோஷித ராஜபக்ஷவை, பிரித்தானியாவின் றோயல் கடற்படைப் பயிற்சிக் கல்லூரியின் கற்கை நெறியொன்றிற்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றத்தைப் புரிந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.