New Updates! Fresh news just arrived.

வீட்டை உடைத்து தங்க ஆபரணத்துடன் பித்தளை நகையையும் திருடிச...

News

வீட்டை உடைத்து தங்க ஆபரணத்துடன் பித்தளை நகையையும் திருடிச் சென்ற திருடர்கள்!

May 28, 2026 6:23 pm
வீட்டை உடைத்து தங்க ஆபரணத்துடன் பித்தளை நகையையும் திருடிச் சென்ற திருடர்கள்!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் நேற்றுமுன்தினம் திருட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த வீட்டின் உரிமையாளர்கள் தமது மகளினை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக நேற்று காலை வீட்டிலிருந்து கொழும்பிற்கு சென்ற நிலையில் குறித்த வீட்டினை உடைத்து மிளகாய் தூள், சரக்குத்தூள் மற்றும் பயிற்றம் உருண்டைகள், மூன்று கோழிகள், கால் பவுண் தோடு, ஒரு மூக்குத்தி, ஒரு தொகை பணம் மற்றும் பித்தளை அட்டியல் போன்றவற்றினை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், கொழும்பிற்கு சென்றவர்கள் நேற்றுமாலை வீடு திரும்பியவேளை வீடு உடைக்கப்பட்டு மேற்படி பொருட்களானது களவாடப்பட்டிருப்பதை அவதானித்த வீட்டின் உரிமையாளர்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இதன்படி, குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now