இவ்வருடம் 10 புதிய மருந்துகள் சந்தைக்கு அறிமுகம்!
News

இவ்வருடத்தில் 10 புதிய மருந்து வகைகளினை சந்தைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தில் 4,000 மில்லியன் மாத்திரைகாளினையும் மற்றும் குளிசைகளினை உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் 70 வகையான மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதுடன், வரலாற்றில் அதிகளவான மருந்து உற்பத்தியினை கடந்த வருடம் முன்னெடுக்க அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தாலல் முடிந்துள்ளது. இதன்படி, 3,625 மில்லியன் மாத்திரைகளும் மற்றும் குளிசைகளும் உற்பத்தி செய்யப்பட்டன.
ஒரு மாதத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய மருந்து உற்பத்தியில் 385 மில்லியன் மாத்திரைகள் மற்றும் குளிசைகள், கடந்த வருடம் மார்ச் மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் 5 புதிய மருந்துகள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோடு, மருத்துவ விநியோகப் பிரிவு வழங்கிய அனைத்து கொள்வனவுக் கட்டளைகளினையும் தட்டுப்பாடின்றி விநியோகிக்கவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனமானது நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் மொத்த வருமானமாக 27.06 பில்லியன் ரூபாவாகப் பதிவாகி இருப்பதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டபட்டுள்ளது.