New Updates! Fresh news just arrived.

வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் மூவர் கைது!

News

வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் மூவர் கைது!

February 5, 2026 1:21 pm
வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் மூவர் கைது!
சுமார் 1 கோடி 28 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளினை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற மூவர், இன்று (05) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு,கொட்டாரமுல்ல பிரதேசத்தினைச் சேர்ந்த 61,42 மற்றும் 18 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர்கள் சஜா நகரில் இருந்து ஏர் அரேபியா விமானம் G.9587 ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.

இதன்படி, மூவரும் கொண்டு வந்த 06 பயணப் பொதிகளில் இருந்து பிளாட்டினம், மான்செஸ்டர் மற்றும் பென்சன் & ஹெட்ஜஸ் போன்ற சிகரெட்டுகள் 85,800 அடங்கிய 429 சிகரெட் அட்டைப்பெட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைளுக்காக புதன்கிழமை (11) அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now