ஹெரோயின், ஐஸ் மற்றும் கொக்கேய்னுடன் மூவர் கைது!
News

நாட்டின் மூன்று பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் ஹெரோயின், ஐஸ் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் 2 கிலோ 842 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து யாயவத்தை, பலபொத்த பகுதியில் உள்ள வீடொன்றும் சோதனையிடப்பட்டுள்ளது.
இதனிடையே, வெல்லம்பிட்டிய – குடா புத்கமுவ பகுதியில் 1 கிலோ 14 கிராம் ஐஸ் மற்றும் 14 கிராம் ஹெரோயினுடன் 30 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கொழும்பு 7 – டொரிங்டன் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் 1 கிலோ 8 கிராம் கொக்கேய்னுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.