New Updates! Fresh news just arrived.

காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது ...

News

காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு!

February 3, 2026 1:51 pm
காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு!
அம்பாறை மாவட்த்தின் காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினுடைய அனுசரனையில் மாவட்ட செயலகமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்துகின்ற கலைஞர்களுக்கு வழங்கும் கலைஞர் சுவதம் வழங்குகின்ற நிகழ்ச்சித் திட்டம் இன்று (03) காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகத்தின் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு எஸ். சுதர்சனின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் இலக்கிய சேவைக்காக எழுத்தாளர் நூருல் ஹுதா உமர், இசை கலைஞர்களான சுதாகரன் லோவிகரன் மற்றும் லோககேசரம் லோஜினி ஆகிய மூன்று கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டதோடு, சுவதம் விருதும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட அரசாங்க அதிபரான எஸ். ஜெகராஜன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.ரிம்ஸான் மற்றும் காரைதீவு பிரதேச செயலக கணக்காளர் திருமதி றிம்ஸியா, அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முஷ்ரிப் முபாரக்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now