வன்முறை குழுவை சேர்ந்த மூவர் வாள்களுடன் கைது!
News

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து வன்முறை குழுவை சேர்ந்த மூவர் இன்றையதினம் வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த மூவரும் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தாக்குதல் நடாத்துவதற்கு தயாராக இருந்த நிலையில் இது குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அந்தவகையில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார், அந்த தாக்குதலை முறியடித்து குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் மூன்று வாள்களுடன் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்