43 கிலோ உலர்ந்த கஞ்சாவோடு மதுவரி அதிகாரிகள் இருவர் உட்பட ...
News
43 கிலோ உலர்ந்த கஞ்சாவோடு மதுவரி அதிகாரிகள் இருவர் உட்பட 3 பேர் கைது!
உலர்ந்த கஞ்சா தொகையினை காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் இருவர் உட்பட மூவர் ஹம்பேகமுவ பகுதியில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனமல்வில - ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் குழுவொன்றினால் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் காரொன்றினை நிறுத்திச் சோதனையிட்ட நிலையில் , அதிலிருந்து 43 கிலோகிராம் 200 கிராம் உலர்ந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், குறித்த காரிலிருந்த மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள், தாம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையே அது எனத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில், அவ்வாறான சுற்றிவளைப்பு நடத்தப்பட்டமைக்கோ அல்லது குறித்த கஞ்சா தொகையினை கொண்டு செல்வதற்கான சட்டபூர்வ அனுமதி உள்ளமைக்கோ எந்தவிதத் தகவல்களும் வெளிவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, மதுவரித் திணைக்களத்தினுடைய அதிகாரிகள் இருவரும் மற்றும் மற்றைய சந்தேகநபரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் இன்று (23) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளினை ஹம்பேகமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.