இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்குக் கடூழிய சிறைத்த...
News
இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்குக் கடூழிய சிறைத்தண்டனை!
ஒரு வாக்குவாதத்தின் போது பணத்தைக் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த இரண்டு முன்னாள் பொலிஸ் அதிகாரிகளுக்கும் ஒரு பொதுமகனுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
2008-ஆம் ஆண்டில் தெஹிவளையில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த வாக்குவாதத்தின் விளைவாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.
வாக்குவாதம் முற்றிய பின்னர், மிரட்டிப் பணம் பறித்தல் சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட இரண்டு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமகனுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளைப் பரிசீலித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட பொதுமகனுக்கு 5 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், இரண்டு முன்னாள் பொலிஸ் அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்துள்ளார்.