New Updates! Fresh news just arrived.

கொலை வழக்கில் மூன்று சந்தேகநபர்கள் கைது!

News

கொலை வழக்கில் மூன்று சந்தேகநபர்கள் கைது!

August 30, 2026 10:17 am
கொலை வழக்கில் மூன்று சந்தேகநபர்கள் கைது!
கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி நபர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் குறித்து நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இதன்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கொலைச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான நபரும், அவருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் மேலும் இருவரும் நேற்று (29) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 23, 47 மற்றும் 49 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கதிரான, ஏத்துகால மற்றும் கொச்சிக்கடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கட்டான பொலிஸாரினால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now