New Updates! Fresh news just arrived.

யாழ். மீசாலையில் புகையிரத விபத்தை தடுத்த முச்சக்கர வண்டிச...

News

யாழ். மீசாலையில் புகையிரத விபத்தை தடுத்த முச்சக்கர வண்டிச் சாரதிகள்!

January 8, 2026 3:56 pm
யாழ். மீசாலையில் புகையிரத விபத்தை தடுத்த முச்சக்கர வண்டிச் சாரதிகள்!
இன்று காலை மீசாலை சந்தி புகையிரதக் கடவையில் ஏற்பட இருந்த விபத்து ஒன்றை முச்சக்கர வண்டி சாரதிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று குறித்த பகுதியில் ரயில் வந்துகொண்டிருந்த நிலையில் கூலர் வாகனம் ஒன்று புகையிரத கடவையினை கடக்க முற்பட்டுள்ளது. இதனை அவதானித்த மீசாலை தரிப்பிடத்தில் நின்றிருந்த முச்சக்கர வண்டிச் சாரதிகள் உடனடியாக செயற்பட்டடு கூலர் வாகனத்தை மறித்தனர். இதன்போது புகையிரதமும் அந்நேரத்தில் பயணித்துள்ளது.

இதனால் அங்கு ஏற்படவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

குறித்த கடவை கடந்த 7 நாட்களாக இயங்காத நிலையில் உள்ளது. இது தொடர்பில் புகையிரத திணைக்களத்திற்கு அறிவித்துள்ள நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது.

கடந்த காலங்களில் தொடர்ச்சியாக புகையிரத விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பறிபோன சம்பவங்கள் இடம்பெற்றும் புகையிரத திணைக்களம் இது குறித்து நடவடிக்கை எடுக்காமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now