New Updates! Fresh news just arrived.

இடியுடன் கூடிய மழை பெய்யும் கூடும்: அனர்த்த முகாமைத்துவ ...

News

இடியுடன் கூடிய மழை பெய்யும் கூடும்: அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

March 19, 2026 9:41 am
இடியுடன் கூடிய மழை பெய்யும் கூடும்:  அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை!
நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் கூடும் என் முன்னறிவிப்பு ஒன்றினை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ-க்கு மேல் மிதமான கனமழை எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now