New Updates! Fresh news just arrived.

100 ரூபாய் இலஞ்சம் பெற்ற நேரக் கண்காணிப்பு அதிகாரி கைது! ...

News

100 ரூபாய் இலஞ்சம் பெற்ற நேரக் கண்காணிப்பு அதிகாரி கைது!

October 21, 2026 10:15 am
100 ரூபாய் இலஞ்சம் பெற்ற நேரக் கண்காணிப்பு அதிகாரி கைது!
100 ரூபாய் இலஞ்சப் பணத்தைக் கோரி, பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் கம்பஹா பிராந்திய அலுவலகத்தைச் சேர்ந்த நேரக் கண்காணிப்பு அதிகாரி (Time Keeper) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (20) நண்பகல் 12.25 மணியளவில் ரத்தோலுகம பேருந்து நிலையத்தில் உள்ள நேரக் கண்காணிப்பாளரின் அறையில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

188 எண்ணுடைய வீதி வழியில் ரத்தோலுகமவிலிருந்து கொழும்பு வரை பயணிக்கும் பேருந்து ஒன்றின் பயண நேரத்தை குறித்த நேரத்தில் தொடங்காமல் தாமதித்துத் தொடங்குவதற்குச் சந்தர்ப்பம் அளிப்பதற்கும், சாதகமான முறையில் பயண நேரத்தைத் தொடங்குவதற்கு அனுமதிப்பதற்கும் சந்தேகநபர் குறித்த பேருந்தின் ஊழியர் ஒருவரிடமிருந்து 100 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now