New Updates! Fresh news just arrived.

டிப்பர் வாகனமும் - முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி...

News

டிப்பர் வாகனமும் - முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து: தாயும் மகளும் பலி!

March 21, 2026 2:49 pm
டிப்பர் வாகனமும் - முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து: தாயும் மகளும் பலி!
யாழ்.சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடி பகுதியில் இன்று(21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

புத்தூரில் இருந்து மீசாலை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையில் இருந்து மட்டுவில் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்துள்ள நிலையில் அவர்களுள் தாயும் மகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு சாரதியும், பிறிதொரு பெண்ணும் காயமடைந்துள்ளனர்.

இதன்படி, காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளினை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now