New Updates! Fresh news just arrived.

சட்டவிரோத மணலுடன் நிறுத்தாது சென்ற டிப்பர்கள் மீது துப்பா...

News

சட்டவிரோத மணலுடன் நிறுத்தாது சென்ற டிப்பர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் கைது!

September 14, 2026 4:48 pm
சட்டவிரோத மணலுடன் நிறுத்தாது சென்ற டிப்பர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் கைது!
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றிரவு புத்தூர் வீதியில் குறித்த டிப்பர்கள் கள்ள மணல் ஏற்றியவாறு சென்ற வேளை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குறித்த வாகனங்களை வழி மறித்தனர்.

அவர்களின் சைகையை மீறி சென்றவேளை குறித்த வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தி அந்த வாகன பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், கொடிகாமம், மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் நேற்றிரவு 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now