டித்வா பாதிப்பு: இடைக்கால தங்குமிட திட்டத்திற்கு அமைச்சரவ...
News
டித்வா பாதிப்பு: இடைக்கால தங்குமிட திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!
'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு மையங்கள், கூடாரங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்காக இடைக்கால தங்குமிடங்களினை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
டித்வா சூறாவளி தாக்கத்தால் ஏற்பட்ட அனர்த்தங்களில் 6,088 வீடுகள் முழுமையாகவும், 115,179 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளன.
இதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 2026-04-22 ஆம் திகதி வரை 494 குடும்பங்கள் நாட்டின் 4 மாவட்டங்களிலுள்ள 20 பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளதோடும், மேலும் பல குடும்பங்கள் கூடாரங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் வீடுகளினை இழந்த குடும்பங்கள், புதிய வீடுகளை அமைக்கும் வரைக்கும் வாடகை வீடுகளில் தங்குவதற்காக 25,000/- ரூபா மாதாந்த வாடகைக் கொடுப்பனவினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த பகுதிகளில் வாடகைக்கு வீடுகளினைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலவுவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) சமர்ப்பித்துள்ள வீட்டுத் திட்டத்திற்கமைய, இலங்கை இராணுவத்தினுடைய மனிதவளப் பங்களிப்புடன் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலும், கேகாலை, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு மையங்கள் மற்றும் கூடாரங்களில் தங்கி இருக்கும் 1,000 குடும்பங்களுக்கு, நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை இடைக்கால தங்குமிடங்களினை அமைத்துக் கொடுப்பதற்காகப் பாதுகாப்பு அமைச்சர் என்னும் வகையில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.