New Updates! Fresh news just arrived.

டித்வா பாதிப்பு: இடைக்கால தங்குமிட நிர்மாணிப்பு மே மாதம் ...

News

டித்வா பாதிப்பு: இடைக்கால தங்குமிட நிர்மாணிப்பு மே மாதம் ஆரம்பம்!

April 28, 2026 4:01 pm
டித்வா பாதிப்பு: இடைக்கால தங்குமிட நிர்மாணிப்பு மே மாதம் ஆரம்பம்!
‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான இடைக்கால தங்குமிடங்கள் அமைப்பது தொடர்பிலான ஒருங்கிணைப்புக் கூட்டம், பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவினுடைய தலைமையில் அண்மையில் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது.

மிகவும் பாதிக்கப்பட்ட கேகாலை, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளையில் ஆகிய மாவட்டங்களில் இடைக்கால தங்குமிடத் திட்டங்களின் முன்னேற்றத்தினை ஆய்வு செய்வதிலும், அவற்றைச் செயல்படுத்துவதினை விரைவுபடுத்துவதிலும் குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த திட்டத்தின் முதன்மை நோக்கம், இடம்பெயர்ந்த சுமார் 1,000 பேரினை பாதுகாப்பான மற்றும் வசிக்கத் தகுந்த தங்குமிடங்களில் தற்காலிகமாக மீள்குடியேற்றுவதாகும். இலங்கை இராணுவத்தினுடைய பொறியியல் நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தினைப் பயன்படுத்தி, கட்டுமானப் பணிகள் மே மதத்தின் முதல் வாரத்தில் தொடங்கி குறுகிய காலத்திற்குள் முடிப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முன்னெடுப்பானது அரசாங்கத்தினுடைய ‘இலங்கையின் மீளமைப்பு’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் வலியுறுத்தியதோடு, மேலும், உரிய நேரத்தில் இப்பணியினை நிறைவு செய்வதினை உறுதி செய்யும் வகையில், தெளிவான கால அட்டவணையுடன் கூடிய விரிவான செயலாக்கத் திட்டத்தினை சமர்ப்பிக்குமாறு இலங்கை அதிகார சபைக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பாதுகாப்புத் தரநிலைகளுக்கு இணங்குவதினை உறுதிசெய்யும் வகையில், அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினுடைய உதவியுடன், கட்டுமானப் பணிகளுக்குப் பொருத்தமான நிலங்களினை கண்டறியும் செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாமதங்களினை தவிர்ப்பதற்காக, அனைத்துப் பங்குதாரர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பினை மேம்படுத்தும் அதே வேளையில், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் தர உறுதிப்பாடு ஆகியவற்றினைப் பேணுவதன் முக்கியத்துவத்தினையும் பிரதி அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

குறித்த சந்திப்பில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ, சிரேஷ்ட அமைச்சக அதிகாரிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் தேசிய வீட்டுவசதி அபிவிருத்தி அதிகார சபை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களினுடைய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now