New Updates! Fresh news just arrived.

பொடி லெசி காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு!

News

பொடி லெசி காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு!

February 27, 2026 9:55 am
பொடி லெசி காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு!
நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி லெசி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்து காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த 'பொடி லெசி' என்னும் ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

மும்பையிலிருந்து இன்று அதிகாலை 5.56 மணிக்கு வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான யுல்.எல் 142 என்கின்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்பு தலைமறைவாகி இருந்த பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமாகியா ஜனித் மதுசங்க எனப்படும் பொடி லெசி, 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

பிணை வழங்கப்பட்டதினை அடுத்து, அவர் சட்டத்தரணி ஒருவரினுடைய காரிலேயே நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, அவர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவினுடைய மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

நேற்று முன்தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினுடைய இரண்டு அதிகாரிகள் இந்தியாவுக்குச் சென்றிருந்ததோடு, அவர் இன்று அதிகாலை நாட்டுக்குக் அழைத்துவரப்பட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now