New Updates! Fresh news just arrived.

பலத்த பாதுகாப்புடன் சமிட்புர சது கொழும்பு குற்றத்தடுப்புப...

News

பலத்த பாதுகாப்புடன் சமிட்புர சது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு!

August 18, 2026 12:31 pm
பலத்த பாதுகாப்புடன் சமிட்புர சது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு!
ஓமானில் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று (18) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சமிட்புர சது என்னும் கங்கானமககே திமுது சதுரங்க பெரேரா மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதன்படி, திட்டமிடப்பட்ட குற்றக் குழுவினுடைய உறுப்பினரான 'மோதரை சது' அல்லது 'சமிட்புர சது' குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளினால் ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கொழும்பு 15, முகத்துவாரம், சமிட்புர பகுதியினை சேர்ந்த 38 வயதான திமுது சதுரங்க பெரேரா எனும் குறித்த நபர் , 2025 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி போலியான வெளிநாட்டு கடவுச்சீட்டினை பயன்படுத்தி ஓமானுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையினுடைய சந்தேகநபர்களில் ஒருவரான இவர், நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் குறித்து விசாரணைகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட ஒருவராகக் கருதப்படுகின்றார்.

ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக பலத்த பாதுகாப்போடு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now