ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்...
News
ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சை தொடர்பில் சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனை அமைச்சரவைக்கு
இலங்கையின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்குத் திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்காக விண்ணப்பங்களைக் கோரி, 2026 பெப்ரவரி 02 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட இலக்கம் 2474/19 கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 5.1 ஆம் பிரிவின்படி, பட்டத்தகைமையைப் பூர்த்தி செய்ய வேண்டிய திகதியை 2026 மார்ச் 05 எனத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவையின் அறிவுறுத்தலுக்கு இணங்க, சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டது.
குறித்த ஆலோசனைகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இது தொடர்பான ஆவணம் 2026.02.16 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
குறித்த ஆலோசனைகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இது தொடர்பான ஆவணம் 2026.02.16 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.