New Updates! Fresh news just arrived.

பிக்குகளின் உரிமைகளை வலியுறுத்தும் 3ஆவது நாள் நடைபயணம் இன...

News

பிக்குகளின் உரிமைகளை வலியுறுத்தும் 3ஆவது நாள் நடைபயணம் இன்று!

October 12, 2026 7:48 am
பிக்குகளின் உரிமைகளை வலியுறுத்தும் 3ஆவது நாள் நடைபயணம் இன்று!
சிறையிலுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் பிற பௌத்த துறவிகளின் மத உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், மகா சங்கத்தினர் முன்னெடுக்கும் பாதயாத்திரை இன்று (12) 3-ஆம் நாளாக தொடர்கிறது.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் கடந்த 10-ஆம் திகதி ஆரம்பமான இந்த பேரணி, முதல் நாளில் கடுகன்னாவைப் பகுதியையும், இரண்டாம் நாளில் கேகாலை நகரையும் அடைந்தது.

இப் பாதயாத்திரை கேகாலை, வரக்காபொல, நிட்டம்புவ, கடவத்தை வழியாக எதிர்வரும் 15-ஆம் திகதி கொழும்பைச் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், 3-வது நாளான இன்று கேகாலையில் இருந்து தொடங்கும் இந்தப் பாதயாத்திரை வரக்காபொல நகரைச் சென்றடையவுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now