சகல முன்பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை!
News
சகல முன்பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை!
சீரற்ற காலநிலை காரணமாக நாளை (27) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
முன்பள்ளிச் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து முன்பள்ளிகளினதும் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை தொடரும் சீரற்ற காலநிலையின் காரணமாக நாட்டினுடைய அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக குறித்த தீர்மானமானது எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றினை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும், க.பொ.த (சாதாரண தர) பரீட்சையினுடைய அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகளானது முன்னர் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.