மலையகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்: பொதுமக்களுக்...
News
மலையகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் மலையகப் பகுதிகளுக்குச் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளுக்கும், உள்ளூர் பொதுமக்களுக்கும் நிலவும் சீரற்ற காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களமும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளன.
இதன்படி, மலையகப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்துவருகின்ற கனமழை மற்றும் வீசியடிக்கும் பலத்த காற்று காரணமாக, சுற்றுலாப் பயணிகள் பயணங்களினை மேற்கொள்ளும்போது அதிக அவதானத்தோடு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நுவரெலியா, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மலைப்பாங்கான மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழுகின்ற அபாயம் நிலவுவதினால், மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளினை கடக்கும்போது அவதானமாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலைப்பாதை வீதிகளில் அடர்ந்த பனிமூட்டமானது காணப்படும் என்பதினால் வாகன ஓட்டுநர்கள் முகப்பு விளக்குகளினை எரியவிட்டவாறு குறைந்த வேகத்தில், கவனமாக வாகனங்களினை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மலையகத்திலுள்ள அருவிகள், ஆறுகள் மற்றும் ஓடைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்ற வாய்ப்புள்ள மையால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதையோ அல்லது நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதினையும் தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அசம்பாவிதங்களினை தவிர்க்கும் பொருட்டு, அசாதாரண காலநிலை மாறும் வரை தேவையற்ற பயணங்களினை தவிர்த்து, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தினுடைய உத்தியோகபூர்வ அறிவிப்புகளினை தொடர்ந்து அவதானிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வி.தீபன்ராஜ்