New Updates! Fresh news just arrived.

புலோலியில் பாரம்பரிய கூட்டுறவு உணவகம் திறந்துவைப்பு! - G...

News

புலோலியில் பாரம்பரிய கூட்டுறவு உணவகம் திறந்துவைப்பு!

March 14, 2026 7:30 pm
புலோலியில்  பாரம்பரிய கூட்டுறவு உணவகம் திறந்துவைப்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் கூட்டுறவு பாரம்பரிய உணவகம் இன்றையதினம் (16) வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் நடராசா திருலிங்கநாதன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு பாரம்பரிய உணவகத்தின் கட்டிடத்தினை சாம்பிர்தாய பூர்வமாக யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன், மற்றும் ஆரம்பிப்பதற்காக நிதியாக 2.8 மில்லியனை வழங்கியிருந்த யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் பிரதிநிதியான பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் சிறிகண்ணன் ஸ்ரீ பிரகாஷ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து கூட்டுறவு பாரம்பரிய உணவக கட்டிட துறப்பினை புலோலி பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவரிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார்.

இதில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுக்கதீஸ், பருத்தித்துறை நகர பிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல், வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளர் பத்மநாதன், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், பருகித்துறை நகர சபை உறுப்பினர்கள், கூட்டுறவு தினைக்கள அதிகாரிகள், வடமராட்ச்சி வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள், புலோலி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் பொது முகமையாளர், இயக்குனர்கள், பணியாளர்கள், பருத்தித்துறை போலீஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now