கிளிநொச்சியில் சோக சம்பவம் – உழவு இயந்திரத்தில் சிக்கி 3 ...
News
கிளிநொச்சியில் சோக சம்பவம் – உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை பலி!
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் நேற்று (21) இரவு இடம்பெற்ற துயர சம்பவத்தில் 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவைப் பகுதியில் குழந்தையும் அவரது சகோதரரும் விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது உறவினர் ஒருவர் உழவு இயந்திரத்தை இயக்கி, முன்றலில் அதனைத் திருப்ப முற்பட்டுள்ளார். குழந்தைகள் இழுவைப் பகுதியில் இருப்பதை கவனிக்காத நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இயந்திரத்திலிருந்து தவறி கீழே விழுந்த குழந்தை அதன் பின்பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளது. பின்னர் குழந்தை உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் உழவு இயந்திரத்தை இயக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.