பொதுஹெரவில் ரயில் தடம் புரண்டது – வடக்கு மார்க்கத்தில் சே...
News
பொதுஹெரவில் ரயில் தடம் புரண்டது – வடக்கு மார்க்கத்தில் சேவை பாதிப்பு!
வடக்கு ரயில் பாதையில் ரயில் ஒன்று தடம் புரண்டதால், அந்த மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கிப் பயணித்த ரயிலே பொதுஹெர ரயில் நிலையப் பகுதியில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பொதுஹெர ரயில் நிலையம் வழியாகச் செல்லும் ரயில்கள் தாமதத்தை எதிர்கொள்ளக்கூடும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
தடம் புரண்ட ரயிலை அப்புறப்படுத்தி, ரயில் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.